ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 142 ஆவது குருபூசை தின நிகழ்வானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெய்வநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில், 2021-11-27ந் திகதி (சனிக்கிழமை) அதாவது நாளைய தினம் மு.ப 10.00 மணிக்கு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சுவாமி ஓங்காரானந்த அன்னக்ஷேத்திர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் விஷேட பூசை வழிபாடுகள், அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் ஆன்மீக அதிதிகளின் சிறப்பு சொற்பொழிவுகள் என்பன இடம்பெறவுள்ளன.
Add Comment