உயிர் போனாலும் மதம் மாற மறுத்த மாணவி லாவண்யாவிற்கு இலங்கை இந்துக்களின் அஞ்சலி.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கட்டாய மதமாற்ற கும்பலின் தொல்லைக்கு ஆளாகியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மு.லாவண்யா என்ற மாணவியின் இழப்பு அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உயிர்குடிக்கும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள், பள்ளியின் பாதிரியாரையும் வன்மையாக கண்டிக்கின்றோம் பிஞ்சு மனதில் நஞ்சைப் பாய்ச்சுகின்ற இதுபோன்ற கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான கடைசி உயிர்பலி லாவண்யாவுடையதாக இருக்கட்டும்.
லாவண்யா திறமையான மாணவி என்றபடியால் அந்தப் பிள்ளையையும் அவரது அம்மாவையும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்தார்கள். அந்தப் பிள்ளை இந்து சமயத்தில் தீவிரமான பற்று இருந்ததால் மதம் மாற மறுத்தாள். அவர்களுடைய குடும்பமும் மதம் மாறவில்லை (அம்மாவும் அப்பாவும்). அதனால் அவர்களை தண்டிக்கும் விதமாக மிகவும் கஷ்டமான வேலைகளை கொடுத்தார்கள். மலசலகூடம் கழுவுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற கடினமான வேலைகளை கொடுத்திருக்கிறார்கள். பாடசாலை செல்ல முயற்சி செய்யும்போது கூட விடவில்லை. கடைசியாக இந்த மதம் மாறச் சொல்லி கடும் துன்புறுத்தியதால் என் உயிர் போனாலும் பரவாயில்லை நான் எனது தாய் மதத்தை விட்டு மதம் மாற மாட்டேன் என்று சொல்லி தற்கொலை செய்து கொண்டாள்.
மதம்மாற மறுத்து உயிர் நீத்த லாவண்யாவின் ஆத்மசாந்தி வேண்டியும்,கிறிஸ்தவ மிஷனரிகள் அட்டுழியத்தை கண்டித்தும் இலங்கையில் உள்ள இந்து ஆலயங்கள் இந்து அமைப்புக்கள், அறநெறிப் பாடசாலைகளும் நாளை 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அனைவரும் ஒன்று திரண்டு பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி.
இந்து ஆலயங்கள், அமைப்புகளின் கூட்டமைப்பு,
இலங்கை
ஒருங்கிணைப்பாளர்
சி.வரத நிரோஷன்
Add Comment