எமது ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வுக்கான நிதியுதவி கோரல்
எமது ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய ஸ்தாபகரினால் சிதானந்த தபோவனம் 1963ம் ஆண்டு இந்தக்காணிப்பகுதியில் நிறுவப்பட்டதன்பின் 1982ம் ஆண்டு அத்திவாரமிடப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயமே எமது ஆலயமாகும். இதற்கெனத் தனியான யாப்பு ஒன்றும் உள்ளது.
இந்த ஆலயத்தில் தற்பொழுது பின்வரும் விழாக்களும் ஆன்மிகப் பணிகளும் இடம்பெறுகின்றன.
விழாக்கள்:
(1) வருடாந்த மகோற்சவம் – தேர்த் திருவிழா – தீர்த்தோற்சவம் (2) கந்த சஷ்டி விரதம் – சூரசங்காரம். (3) திருவெம்பாவை. (4) விநாயகர் சதுர்த்தி விழா. (5) நவராத்திரி விழா. (6) தினப் பூசைகளும், பௌர்ணமித் திருவிழாக்களும்.
ஆன்மீகப் பணிகள்:
(1) அன்னதானம் வழங்கல். (2) அறநெறி வகுப்புக்களை நடத்துதல். (3) பாலர் பாடசாலை நடத்துதல். (4) சிற்ப உற்பத்திகளை மேற்கொள்ளல். (5) பசு வளர்த்தல். (6) கடை நடத்துதல்.
எமது ஆலயத்தில் பிரதி செவ்வாய்தோறும் பக்தர்கள் நேர்முக தரிசனம் செய்தல், முடிந்தளவு தமிழ் மந்திர உச்சாடனம் செய்து பூஜை நடத்துதல், அபிஷேக கும்பங்களை பக்தர்களே சுமந்து மூலஸ்தானம் வரை சென்று வழங்குதல் ஆகிய கைங்கரியங்கள் இடம்பெறுகின்றன.
எமது ஆலயத்துக்கு வருமானமீட்டத்தக்க சொத்துக்களோ, வருமானமீட்டும் வாய்ப்போ இல்லாத காரணத்தினால் முற்றுமுழுதாக பக்தர்களின் நன்கொடைகள் மூலமாகவே சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
எமது ஆலயம் கடந்த 2010ம் ஆண்டு ஆறாம் மாதம் மஹா கும்பாபிஷேகம் கண்டது. அதன் காரணமாக இவ்வாண்டு மஹாகும்பாபிஷேகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனினும் இதற்குப் பாரியளவு நிதி தேவையாயுள்ளது. இதற்கென வர்ண வேலைகளுக்கு மாத்திரம் சுமார் ரூபா 1,500,000.00 மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாட்டில் வதியும் இந்துப் பக்தர்களாகிய தங்களிடமிருந்து பெரும் உதவியினை நாடி நிற்கிறோம். மேற்காட்டப்பட்ட விடயங்களைக் கவனத்திற்கெடுத்து தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்குமாறு மிகவும் வாஞ்சையுடன் வேண்டி நிற்கிறோம்.
எமது வங்கிக் கணக்கு விவரம்: தேசிய சேமிப்பு வங்கி, மட்டக்களப்பு கணக்கிலக்கம்: 100210280003 தங்களுக்கு எமது ஈழத்துத் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருள் என்றென்றும் கிடைக்கப் பிரார்திக்கிறோம்.
Add Comment