- This event has passed.
சூரசம்ஹாரம்
10 Nov @ 11:00 am - 9:00 pm
ஸ்கந்த ஷஷ்டி விரத இறுதி நிகழ்வான சூரசம்ஹாரம் 10.11.2021 (புதன்கிழமை) அன்று எமது ஆலய வெளிவீதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அன்று காலை 11.00 மணிக்கு அபிஷேகம், பூசைகள் என்பன ஆரம்பமாகி, மதியம் 03.00 மணியளவில் சுவாமி வெளிவீதியில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார்.
முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார்.
இறுதியாக மாமரமாக உருமாறி வந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார்.