ஸ்கந்த ஷஷ்டி விரதம் – 5ம் நாள்
எமது ஆலயத்தில் இடம்பெற்ற ஸ்கந்த ஷஷ்டி விரத 5ம் நாள் பூஜை நிகழ்வுகள்
எமது ஆலயத்தில் இடம்பெற்ற ஸ்கந்த ஷஷ்டி விரத 5ம் நாள் பூஜை நிகழ்வுகள்
ஸ்கந்த ஷஷ்டி விரத இறுதி நிகழ்வான சூரசம்ஹாரம் 10.11.2021 (புதன்கிழமை) அன்று எமது ஆலய வெளிவீதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அன்று காலை 11.00 மணிக்கு அபிஷேகம், பூசைகள் என்பன ஆரம்பமாகி, மதியம் 03.00 மணியளவில் சுவாமி வெளிவீதியில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். இறுதியாக மாமரமாக […]
ஸ்கந்த ஷஷ்டி விரதம் 11.11.2021 (வியாழக்கிழமை) அன்று காலையில் நடைபெற்ற பூசை நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.
எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி தினத்தையொட்டி இன்றைய தினம் எமது அறநெறிப் பாடசாலையில், சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்கள் பற்றிய சிறு சொற்பொழிவுகள், ஒளிப் படக்காட்சி மற்றும் பூசை என்பன நடைபெற்று, இறுதியாக மாணவர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி நினைவு தினத்தையொட்டி இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையில் தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்தநாள் விழா) கொண்டாடப்பட்டது. வழக்கமாக நாம் எல்லோரும் பிறந்தநாள் விழாவை மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி, மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைத்து, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம். ஆனால் இன்று எமது பாலர் பாடசாலையில் மெழுகுவர்த்திகளை வாயால் ஊதியணைப்பதற்குப் பதிலாக, அதனைக் கொண்டு குத்து விளக்குகளில் தீபம் ஏற்றி, கேக் வெட்டுவதற்குப் பதிலாக பாற்சோறினை வெட்டி அதை எல்லோருக்கும் பகிர்ந்தளித்து ஜன்ம […]
இப்பூவுலகில் சைவத்தையும் தமிழையும் வளர்த்தெடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மகான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூசை தின நிகழ்வானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு தெய்வநெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சுவாமி ஓங்காரானந்த அன்னக்ஷேத்திர மண்டபத்தில், மாவட்ட செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம் அவர்களின் தலைமையில் 27.11.2021 ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கிழக்கிலங்கை […]
இன்றைய தினம் எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோகுல அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற செயற்பாடுகள்
05.04.2023 அன்று மாலை 05.30 மணிதொடக்கம் எமது ஆலயத்தில் பங்குனி உத்தரத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஆனி 9ம் நாள் திங்கட்கிழமை (24.06.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வருதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூசை உபயகாரர் - செல்வராஜா ரிசோபன் (மட்டக்களப்பு)