Aranery

  1. Events
  2. Aranery

Views Navigation

Event Views Navigation

Today

வீணைப் பயிற்சி

எமது அறநெறி பாடசாலை மாணவர்களுக்காக வீணைப் பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

காயத்ரி ஹோமம்

04.04.2021 அன்று  எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோல அறநெறிப் பாடசாலையில், மாதம் ஒருமுறை நடைபெற்று வருகின்ற மாணவர்களால் செய்யப்படும் காயத்ரி ஹோமம் சிறப்பாக இடம்பெற்றது.

மாணவர்களுக்கான அறநெறிப் பாடநூல்கள்

எமது அறநெறிப் பாடசாலையில்  வழமைபோல் செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று, அதனைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கான சின்னங்களும், மாணவர்களுக்கான அறநெறிப் பாடநூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.  

அறநெறி பாடசாலை மீண்டும் ஆரம்பம்

கொவிட் 19 பரவல் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த  எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோகுல அறநெறிப் பாடசாலையானது மீண்டும் இன்றைய தினம் ஆரம்பமாகியது. மாணவர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அறநெறி பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

சிரமதானப் பணி

எமது ஆலயத்தில் நடைபெறவிருக்கின்ற சூரசம்ஹார நிகழ்வினையொட்டி  எமது அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் ஆலய வெளிவீதியில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி நினைவு தினத்தை முன்னிட்டு

எமது ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மஹாசமாதி தினத்தையொட்டி இன்றைய தினம் எமது அறநெறிப் பாடசாலையில், சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்கள் பற்றிய சிறு சொற்பொழிவுகள், ஒளிப் படக்காட்சி மற்றும் பூசை என்பன நடைபெற்று, இறுதியாக மாணவர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.